Saturday, January 9, 2010

தேவநாதன் மகிமை

எங்கோ படித்தது

"கோவிலுக்குள் சென்று திரும்பும்போது
எலுமிச்சம்பழம் கனியானது
தண்ணீர் தீர்த்தமானது
மனிதன் பக்தனானான்"

இதெல்லாஞ்சரி.
கன்னி கர்ப்பவதியானாளே
இதென்ன நியாயம்?

நவீன மகாபாரதம்

கை கால் எடுக்க வேண்டுமா
வலதா இடதா
ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை
ஊமை அடியா
உள் காயம் ஏற்படுத்தவா
காயம் வெளியே தெரிய வேண்டுமா

அதெல்லாம் போதாது போதாது

வேறென்ன செய்ய வேண்டும் தாயே

எம்புருசன் உயிரை எடுக்க வேண்டும்
கை வெட்டுவியோ
கால் வெட்டுவியோ
நள்ளிரவிலோ பட்டப் பகலிலோ
ஸ்டேசனிலோ
வீட்டிலோ
உள்ளேயோ வெளியேயோ
எங்கே வேணுமின்னாலும் நடத்திக்க
இந்தா கூலி